உலக நாடுகள் பலவற்றிலும் தற்போது கடுமையான நிதி நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பொருளாதார பிரச்சினை, நிதி மற்றும் வாங்கும் சக்தியை குறைப்பது, வளர்ச்சி விகித சரிவில் மட்டும் பாதிப்பை ஏற்படத்தவில்லை, மேலும் மக்களிடம் விரக்தி, மன அழுத்தம் உட்பட பல உளவியல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலங்களில் மட்டும் முதலீட்டாளர்கள், பங்கு தரகர்கள், முதலீட்டு வங்கிகளில் வேலை செய்வோர் உளவியல் நிபுணர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது மூன்று மடங்கு அதிகமாகி உள்ளது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
உலக சுகாதார அமைப்பு, நிதி நெருக்கடிகளால் தற்கொலைகள் அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது.
இப்போதைய நிலையில், வளர்ந்த நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளோரில் 75 விழுக்காட்டினர் உளவியல் சிகிச்சை பெற்றுக் கொள்ளவில்லை.
நிதி நெருக்கடியால் வரும் பாதிப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. வருங்காலத்தில் உளவியல் ரீதியான பிரச்சினையில் சிக்குவதும் தற்கொலை செய்வதும் அதிகரிக்கவே செய்யும் என்கிறது உலக சுகாதார அமைப்பு.