Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்த “பூஸ்ட்” வேண்டுமா?

உங்கள் படைப்பாற்றலை மேம்படுத்த “பூஸ்ட்” வேண்டுமா?
, திங்கள், 9 ஜனவரி 2012 (16:26 IST)
படைப்பாற்றல், கலைஞர்கள், இசை வல்லுநர்கள் அல்லது எழுத்தாளர்களுக்கு மட்டும் உரியதன்று. மாறாக, சாதாரண மக்களாலும் தவிர்க்க முடியாதது. நம் எல்லோரிடமும் இயல்பாகவே படைப்பாற்றல் என்னும் மகத்தான ஆற்றல் உள்ளது.

உளவியல் நிபுணரான ராபர்ட் ஜெ.ஸ்டெர்ன்பெர்க் என்பவர், “படைப்பாற்றலானது, எந்த அளவிற்கு அசலாக இருக்கிறதோ; அதே அளவிற்குப் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்” என்கிறார். அவரது கூற்றுப்படி, படைப்பாற்றலானது சிக்கல்களை தீர்ப்பதற்கான வழி மாத்திரம் அன்றி, இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிப்பதற்கும் உதவுகிறது.

படைப்பாற்றலமேம்படுத்த விரும்புபவர்களுக்கு இதோ சில எளிமையான குறிப்புகள்.

1. உங்களுக்குள் ஒளிர்விடும் படைப்பாற்றலை நீங்களே மேம்படுத்துங்கள்!

படைப்பாற்றலில் உங்களை முழுமையாக ஈடுபடுத்துவதே இதற்கான மிகச்சிறந்த வழியாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை நிறுத்தவோ தவிர்க்கவோ வேண்டாம். இலக்குகளை அமைத்து, அதற்கு வேண்டிய பிற தேவைகளைப் பட்டியலிடுவதன் மூலம் உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். தினம் தினம் இதை ஒரு பயிற்சியாகவே மேற்கொள்ளலாம்.

2. படைப்பாற்றலில் வல்லுநராகுங்கள்!

பிரச்சனையின் அல்லது உங்களுடைய புதிய படைப்பு ஒன்றின் தலைப்பை மிகத்தெளிவாக விளங்கிக்கொள்வது, படைப்பாற்றலை மேம்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதன்மூலம் குறித்த அந்தத் துறையில் சிறந்த வல்லுநராக விளங்க வாய்ப்பு ஏற்படும். நாவல், சினிமா உள்ளிட்ட எந்தவொரு படைப்பாக்கத்திற்கும் இது உதவும்.

3. ஆர்வத்துடன் கூடிய உங்கள் ஆற்றலுக்கான வெகுமதி!

படைப்பாற்றலை மேம்படுத்துவதில் உங்களுக்கு ஏற்படும் பொதுவாதடையானது, உங்கள் வெற்றியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தாது. உங்களுக்கு நீங்களே உந்துசக்தியாக விளங்கி, செயல்பட்டுக் கொண்டிருக்கும் வரையில், ஆர்வத்துடன் கூடிய படைப்பாற்றல் மூலமாவெற்றியும் அதற்கான வெகுமதியும் உறுதியாகிவிடுகிறது.

4. படைப்பாற்றலுக்கான வெகுமதி, எதிர்பார்ப்பைத் தாண்டியும் ஏற்படும்!

உங்களுக்குள் உள்ள படைப்பாற்றலானது கொடுக்கப்போகும் வெகுமதி என்னவென்று, படைப்பாளரான உங்களுக்குத் தெரிந்திருக்கும். எனினும் சில நேரங்களில் அதன் பலன் எதிர்பாராத அளவில் மிகப்பெரியதாக அமைவதோடு தொடர்ந்து நிலைக்கவும் செய்கிறது. இதன்மூலம் படைப்பாற்றலுக்கு பலன் உண்டு என்பது புலனாகிறது.

5. சிறந்த படைப்பாற்றலுக்காஎத்தகைய இடர்பாட்டையும் எதிர்கொள்ளல்!

உங்கள் ஆற்றல்களைக் கொண்டு படைப்பாற்றலை மேம்படுத்துகையில், ஏதேனும் இடர்களை எதிர்கொள்ள நேருமானால், அதற்கு உங்களை தயார்படுத்துவது அவசியம். உங்கள் முயற்சி எப்பொழுதுமே வெற்றியை நோக்கி இட்டுச்செல்லாது. எனவே, எதிர்காலத்தில் மிகச்சிறந்த படைப்பாளியாக விளங்க, திறமைக்கும் ஆற்றலுக்கும் தடையாக உள்ளவற்றை வென்று உங்களுக்கு நீங்களே உந்துசக்தியாக விளங்குங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil