Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்மைக்கும் உண்டு காதல்........!

Advertiesment
பெண்மைக்கும் உண்டு காதல்........!
, வியாழன், 7 ஜனவரி 2016 (05:50 IST)
நமது நாகரீகம் எவ்வளவுதான் முன்னேறினாலும், மனிதன் காதல் விஷயத்தில் யதார்த்ததை தாண்டி அவனால் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியவில்லை. காரணம், காதல் என்பது, வெறும் உடல் , அழகு மட்டும் அல்ல. அது உணர்வு சம்பந்தப்பட்டது. மனம் சம்பந்தப்பட்டது. அதனால் தான் காதல் பல வருடங்கள் ஆனாலும் அழியாமல் அப்படியே வாழ்கிறது.
 

 
இதில், ஆண்களைவிட பெண்களின் காதல் தான் ரொம்பவே சோகம், அந்த பெண்களின் காதல் குறித்து, கவிஞர் மிகவும் யாதார்த்தை பரவச் செய்துள்ளார். அவரது வரிகளில் விளையாடும் தமிழும், காதல் மொழியும், உணர்வும் மிக அற்புதம். அதை நாமும் கேட்டு ரசிப்போம். இதோ அந்த கவிதை மொழி...!
 
ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொருட்களையோ அல்ல. 
அவளுக்கு தேவைப்படுவதெல்லாம்

 
* உங்களுடைய நேரம்
 
* உங்கள் புன்னகை
 
* உங்கள் நேர்மை
 
* உங்கள் புரிதல்
 
மற்றும் உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும்என்பதைத்தான்
பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும் , இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !
 
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-
மச்சான் நண்பர்களிடத்தில் . . . !
இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள்
பாடி . . . !
 
இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டு மொத்த
ஆண்கள் வர்க்கமே மோசமென்று !
 
இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக்கூசும்
விமர்சனங்களை . . . !
 
இவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும் “தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல்
தன்னை வருத்துவது'' மட்டுமே . . . ! ! !
 
முற்போக்கு பெண் கவிஞர்:-  எம்.வினிதா.

Share this Story:

Follow Webdunia tamil