செய்வது அறியாது
விழித்த மக்கள் -தண்ணீரில்
தத்தளித்த ஊர்கள்
மழையின் கோரத்தாண்டவம்
சிக்கி தவித்தது
தமிழகம் ...
மழைநீர் தங்கும்
இடங்களில் இல்லங்கள் ,
விளை நிலங்கள்,
எல்லாம் குடியிருப்புகள் ,
கால்வாய்களிலும்,கம்மாய்களிலும்
கூட நிரம்பி போனது கட்டிடங்கள்
யோசிக்காமல் நாம்
செய்த பிழைகள்
தவித்து நாம்
அழும் பொழுது
அரசியலாக்கி விளையாடும்
பல கட்சிகள் !!
இயற்கையை நாம்
அழித்தால்...
நிச்சயம் ஒரு நாள்
இயற்க்கை
நம்மை அழிக்கும்
இனியேனும் விழித்துக்
கொள்ளவோம்
விழி நீர் வடிப்பதை
தங்க இடம் அளிப்போம்
இயற்கையோடு
இயந்து, மகிழ்ந்து
வருடம் பல வாழ்ந்திடுவோம்
இறைவன் படைப்பில்
இயற்கையை காப்பதே
நமது கடமை
என்றும்....என்றென்றும்...