ஆசையில் நானும் எழுதுகிறேன்
அன்பால் நானும் எழுதுகிறேன்
உன் அன்பிற்காக எழுதுகிறேன்
பார்த்துப் பார்த்து எழுதுகிறேன்
நீ
படித்துப் பார்க்க எழுதுகிறேன்
நினைத்து நினைத்து எழுதுகிறேன்
உன்
நினைவில் நிற்க எழுதுகிறேன்
நேசத்தோடு எழுதுகிறேன்
நீ
நேசிப்பாய் என எழுதுகிறேன்
உயிரை கொண்டு எழுதுகிறேன்
உன்னை
உயிராய் எண்ணி அனுப்புகிறேன்
- சாரா தூரிகை