Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழகிய ஹைக்கூ....

அழகிய ஹைக்கூ....
, வியாழன், 3 செப்டம்பர் 2015 (03:44 IST)
ஹைக்கூ கவிதை என்றாலே பலருக்கும் கொள்ளைப்பிரியம். அதும் சுவைமிகு கவிதை என்றால் சொல்லவும் வேண்டுமா என்ன?  படித்து முடித்தால் தானே மனம் அமைதி பெரும். இந்த அழகான ஹைக்கூவை நீங்களும் ஒரு முறை சுவைத்துப் பாருங்களேன்.
 

 
சுமையான போதும் 
பாதுகாப்பு 
நத்தையின் கூடு !
 
கடவுச்சீட்டு விசா இன்றி 
கடல் கடந்து பயணம் 
பறவை !
 
சேற்றில் மலந்தும் 
ஒட்டவில்லை சேறு
செந்தாமரை !
 
குரல்   இனிமை 
குயில்
நிறம் கருமை !
 
அடைகாக்கா அறியாவிடினும் 
காக்காவின் தயவில் பிறப்பு 
குயிலினம் !
 
நம்பமுடியாத உண்மை 
மானை விழுங்கும் 
மலைப்பாம்பு !
 
 
இனிமைதான் 
ரசித்துக் கேட்டால் 
தவளையின் கச்சேரி  !
 
இனிய அனுபவம் 
நனைந்து பாருங்கள் 
மழை !
 
மழையில் நனைந்தும் 
கரையவில்லை வண்ணம் 
மயில் தொகை !
 
நிலா வேண்டி 
அழும் குழந்தை 
அமாவாசை !
 
முதல் மாதம் கனமாக 
கடைசி மாதம் லேசாக 
நாட்காட்டி !
 
மீண்டும் துளிர்த்தது 
பட்ட மரம் 
மனிதன் ?
 
தோட்டம் அழித்து
கட்டிய வீட்டில் 
செயற்கை  மலர்கள்
 
பாடுவதில்லை 
நாற்று நாடுவோர் 
பண்பலை வானொலி !
 
ரேகை  பார்த்தது ஈசல் 
சொன்னார் சோதிடர்
ஆயுசு நூறு !
 
மணி  காட்டாவிட்டாலும் 
மகிழ்ச்சி தந்தது 
மிட்டாய் கடிகாரம் !
 
 
 -:கவிஞர் இரா .இரவி

Share this Story:

Follow Webdunia tamil