காத்திருக்கட்டும் பாம்பு தன்
களைச்செடியின் கீழ்
காத்திருக்கட்டும் எழுத்தும் அதன்
வார்த்தைகளின் அடியில்
மெதுவாகவும், விரைவாகவும்
உறக்கமின்றி காத்திருக்கட்டும் அமைதியாக
பாய்ந்தடிக்கத் தயாராக.
உருவகம் வழியே மானிடரையும் கற்களையும் சேர்த்திணைக்க.
பண்ணமை.(கருத்துக்களால் அல்ல பொருட்களால்)
கண்டுபிடி!
பாறைகளைப் பிளக்கும் அந்த சாக்சஃப்ரிஜ் மலரே
என் மலர்.
(William Carlos Williams - "A Sort of a Song")
தமிழில் : ஆர்.முத்துக்குமார்.