Select Your Language
பட்சி ராஜா
, திங்கள், 5 செப்டம்பர் 2011 (16:38 IST)
மரத்தின் உச்சியில்மௌனச் சூழ்ச்சியில்இமைகள் விரித்துஇறக்கைகள் மடித்துத் துயில்கின்றேன்.உறங்கும் பொழுதிலும்உள்மனக் கனவிலும்வேட்டைச் சோதனைவெற்றி ஒத்திகை பயில்கின்றேன்.அலகும் நகமும்இறகும் சிறகும்குறி தவறாதுஇரை தப்பாது வினைபுரியும்.உயரும் மரமும்ஒளியும் வளியும்பார்த்திருப்பதற்கும்பாய்ந்தடிப்பதற்கும் துணைபுரியும்வெளியில் பறப்பினும்கிளையில் இருப்பினும்நோட்டம் தரையிலும்நோக்கம் இரையிலும் பதிக்கின்றேன்.வல்லான் உரிமையைவயிற்றுக் கடமையைரத்த நீதியைராட்சச நியதியை விதிக்கின்றேன்.வளர் மரம் வளர்ந்திடும்ஒளிர்கதிர் ஒளிர்ந்திடும்விரைவளி விரைந்திடும்விழும்பலி விழிந்திடும் இனிமேலும்.இதுவரை எவ்விதம்என்றுமே அவ்விதம்மாறும் பிறிதுமேமாறேன் சிறிதுமே ஒருக்காலும்.(
Ted Hughes - "Hawk Roosting")மொழிபெயர்ப்பு: நோயல் ஜோசப் இருதயராஜ்