சுவர்களுக்கு இடையே
(Between the Walls)
மருத்துவமனையின்
பின் புறம்
அங்கு
எதுவும் விளையப்போவதில்லை
உள்ளது
கங்குகள்
அதில் பள
பளக்கிறது
பச்சை சீசாவின்
துண்டுகள்
-------
பண்பாளர்
(The Gentle Man)
நான் என்னுடைய காலரைப்
பொருத்துகையில் என்னுடைய
கழுத்தில்
என் கைவிரல்களின் தடவுதலை
உணர்ந்தேன்
எனக்குத் தெரிந்த
அன்பான பெண்ணைப்பற்றி
கழிவிரக்கத்துடன் யோசித்துக் கொண்டே!