Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசன் கவிதை‬

கமல்ஹாசன் கவிதை‬
, செவ்வாய், 4 பிப்ரவரி 2014 (16:54 IST)
1996-ல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தலித் சிறுமி தனம், ஆசிரியர் அடித்ததில் ஒரு கண் இழந்தார். அந்த சிறுமியின் கண் சிகிச்சைக்கு 1996-ல் ரூ.10000/- நிதி உதவி அளித்து அந்த சிறுமியின் அவலநிலையை உணர்த்தும், கமல்ஹாசன் எழுதிய கவிதை இது.
FILE

தமிழ் மகளுக்கு,

தேடித் தேடி மருத்துவம் செய்தும் மாறாது இந்த சாதி சுரம்
கேடிகள் ஆயிரம் கூட்டணி சேர்ந்து கேட்டில் வந்து முடிந்தது காண்!

காவியும் நாமமும் குடுமியும் கோசமும் கண்டு மயங்கும் மந்தைகளாய்
ஆகிப் போனதில் வந்த விளைவுகள் சொல்லி புரியும் வேளையிலே
ஆரிய வேடத்தை திராவிடன் பூண்டதில் காரியம் கெட்டு போனது காண்!

ஓசையும் பூசையும் பார்ப்பனன் சொல்படி ஆயிரம் ஆண்டுகள் செய்ததனால் ஆகமம் பழகிப் போனது காண்!

அன்றொரு பெரியவர் சாடிய சாடலில் காவியின் வண்ணம் சற்றே மாறி கருப்பாய் சிவப்பாய் திரியுது காண்!

சாதியும் சாமியும் சாராயம் போல் சந்தை கடையில் விற்குது காண்!

சர்கார் எத்தனை மாறி வந்தாலும் மாறா வர்ணம் நாலும் காண்!

புத்தன் சொன்ன தம்மிம பதத்தில் பாதி மட்டுமே பிரபலம் காண்!

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil