Article Olympic Achievers %e0%ae%ae%e0%af%8a%e0%ae%b9%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81 %e0%ae%85%e0%ae%b2%e0%ae%bf 108071800057_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொஹம்மது அலி

Advertiesment
மொஹம்மது அலி olympic 2008
, வெள்ளி, 18 ஜூலை 2008 (17:24 IST)
மொஹம்மது அலி யாரென்று அறியாத விளையாட்டைப் பற்றி ஆர்வமுள்ள எவரும் இருக்க முடியாது. கிரேட்டஸ்ட் என்கின்ற அடைமொழி வார்த்தைக்கு அலெக்சாண்டருக்குப் பின் மொஹம்மது அலியே உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டவராய் இருப்பவர்.

webdunia photoWD
ஆனால், மொஹம்மது அலியாய், உலகின் புகழ்பெற்ற ஹெவிவெயிட் குத்துச்சண்டை வீரராய் அவர் அறிமுகமாவதற்கு முன்னரே, 18 வயது இளைஞராக அமெரிக்காவிற்காக 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற ரோம் ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்கினார்.

அன்று, காஷியஸ் மார்செலஸ் கிளே என்ற பெயருடன் இருந்த மொஹம்மது அலி, ஒலிம்பிக் போட்டிகளில் லைட் ஹெவிவெயிட் பிரிவில் களமிறங்கினார்.

காஷியஸ் கிளேயின் அதிரடி குத்துக்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் எதிரில் வந்த வீரர்கள் படுதோல்வியுற்றனர். 4 போட்டிகளிலும் சுலபமாக வென்று இறுதிக்கு வந்த காஷியஸ் கிளேயை, 3 முறை ஐரோப்பா சாம்பியன் பட்டத்தை வென்ற பிக்னியூ பீட்டர் சிகோஸ்வ்கி என்ற வீரர் சந்தித்தார்.

இறுதிப் போட்டியிலும் எவ்வித சிரமமுமின்றி வெற்றி பெற்ற காஷியஸ் கிளே, தங்கப் பதக்கம் வென்று மிகச் சிறந்த இளம் வீரராக உலகத்திற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தொழில்முறை குத்துச் சண்டை வீரராக மாறிய காஷியஸ் கிளே, உலக ஹெவிவெயிட் சாம்பியனாக திகழ்ந்த சோனி லிஸ்டனை வென்று 1964 ஆம் ஆண்டு உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஆனார்.

1968 வரை 9 முறை போட்டியிட்டு உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட காஷியஸ் கிளே, இஸ்லாமியராக மதம் மாறி மொஹம்மது அலி என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

வியட்நாம் போரில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டதற்கு இணங்க மறுத்த காரணத்தினால் அவருடைய உலக சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டது. மூன்றரை ஆண்டுகளுக்கு சண்டையிடக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது.

1974 ஆம் ஆண்டு மீண்டும் களத்தில் இறங்கிய மொஹம்மது அலி, அப்பொழுது உலக ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்த ஜார்ஜ் ஃபோர்மேனை வீழ்த்தி இரண்டாவது உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

10 முறை பல்வேறு வீரர்களுடன் சண்டையிட்டு தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட மொஹம்மது அலி, லியாம் ஸ்பிங்ஸ் இடம் தோற்று பட்டத்தை பறிகொடுத்தார். ஆனால், ஏழே மாதத்தில் மீண்டும் அவருடன் சண்டையிட்டு அவரைத் தோற்கடித்து 3வது முறையாக உலக ஹெவிவெயிட் சாம்பியன் ஆனார்.

உலக சாம்பியன் பட்டத்தை 3 முறை வென்று 3 முறை இழந்து மீண்டும் வென்ற ஒரே வீரர் மொஹம்மது அலி. 1981 ஆம் ஆண்டு தனது 39வது வயதில் மொஹம்மது அலி ஓய்வு பெற்றார். ஹெவிவெயிட் குத்துச் சண்டை வீரராக 61 முறை களமிறங்கிய மொஹம்மது அலி, 56 முறை வென்றுள்ளார், 5 முறை தோற்றுள்ளார்.

குத்துச் சண்டை உலகின் மகா வீரராகத் திகழ்ந்த மொஹம்மது அலி, 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி போட்டிகளைத் துவக்கி வைக்கும் பெருமையைப் பெற்றார்.

Share this Story:

Follow Webdunia tamil