Article Olympic Achievers %e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d %e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf 108071800041_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேட் பியாண்டி

Advertiesment
மேட் பியாண்டி
ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் 7 தங்கங்களை வென்ற நீச்சல் வீரர்கள் இருவரில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த மேட் பியாண்டி. மற்றொருவர் மார்க் ஸ்பிட்ஸ்.

webdunia photoWD
சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நீச்சல் குளத்தை தனது திறமையால் கலக்கிய அபார வீரராக பியாண்டி திகழ்ந்தார்.

1984 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்ஜெல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் சார்பாக 100 மீட்டர் ஃபிரீ ஸ்டைல் தொடர் நீச்சலில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற மேட் பியாண்டி, சியோல் ஒலிம்பிக் போட்டியில் அடுத்தடுத்து 5 தங்கப்பதக்கங்களை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

200 மீட்டர் ஃபிரீ ஸ்டைல் நீச்சலில் வெண்கலம் வென்ற பியாண்டி, 100 பட்டர்ஃபிளை நீச்சலில் தங்கம் வெல்வார் என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சூரினாம் நாட்டைச் சேர்ந்த அந்தோணி நெஸ்டி என்ற வீரர் 1 / 100 நொடி வித்தியாசத்தில் பியாண்டியை வென்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

"எனது நகம் நீண்டதாக இருந்திருந்தால் நான் முதலில் தொட்டிருப்பேன். தங்கத்தையும் வென்றிருப்பேன்" என்று வருத்தத்துடன் பியாண்டி கூறினார். ஆனால், இந்தத் தோல்வி அவருடைய திறமையை, நம்பிக்கையை சீர்குலைக்கவில்லை. 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் ஃபிரீ ஸ்டைல் நீச்சல் போட்டிகளில் தங்கம் வென்றது மட்டுமின்றி, புதிய உலக சாதனையைப் படைத்த பியாண்டி, 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு 3 தங்கங்களை வென்றார். இந்த 5 போட்டிகளில் மட்டும் 4-ல் புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.

5 தங்கங்களுடனும், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடனும் மொத்தம் 7 பதக்கங்களை வென்றார் பியாண்டி. அதன்பிறகு 1992 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஃபிரீ ஸ்டைலில் பியாண்டி தோல்வியைத் தழுவினார். ஆனால், 100 மீட்டர் தொடர் நீச்சலில் தங்கத்தையும், 50 மீட்டர் ஃபிரீ ஸ்டைல் நீச்சலிலும் தங்கத்தை வென்றார்.

அதன்பிறகு, 100 மீட்டர் மெட்லி போட்டியில் மேலும் ஒரு தங்கத்தை வென்றார்.

ஒலிம்பிக் போட்டிகளில் மட்டுமின்றி, 1986, 1996 ஆம் ஆண்டுகளில் நடந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும், 3 வெண்கலப் பதக்கங்களையும் வென்றார் மேட் பியாண்டி.

Share this Story:

Follow Webdunia tamil