Article Olympic Achievers %e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d %e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%af%87%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d 108071800021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டான் ஃப்ரேசர்

Advertiesment
டான் ஃப்ரேசர்
, வெள்ளி, 18 ஜூலை 2008 (17:00 IST)
webdunia photoWD
100 மீ நீச்சலில் ஒரு நிமிடத் தடையை முதலில் உடைத்த வீராங்கனை ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த டான் ஃப்ரேசர் தனது 18வது வயதில் ஸ்டாக் ஹோவில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் 20 ஆண்டுகளாக நீடித்து வந்த வில்லி டென் அயூடன் எனும் வீராங்கனை உருவாக்கியிருந்த 100 மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் சாதனையை முறியடித்து தங்கம் வென்றார்.

அதே ஆண்டு (1956) டிசம்பர் மாதம் மெல்போர்னில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் களமிறங்கிய டான் ஃப்ரேசர், 100 மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சலில் தங்கம் வென்றது மட்டுமின்றி, 8 மாதங்களுக்கு முன் தான் உருவாக்கிய உலக சாதனையை முறியடித்து புதிய சாதனையை உருவாக்கினார்.

அது மட்டுமின்றி, ஆஸ்ட்ரேலிய அணிக்கு 4 x 100 மீ ஃப்ரீ ஸ்டைல் நீச்சலில் தங்கத்தைப் பெற்றுத் தந்தார்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு 1960 ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 2வது முறையாக களமிறங்கி 100 மீ ஃப்ரீ ஸ்டைல் முதலிடத்தை வென்று அடுத்தடுத்து 2 ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நீச்சல் போட்டியில் தொடர்ந்து தங்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.

1962 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி மெல்போர்னில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் முதல்முறையாக 100 மீ தூரத்தை ஒரு நிமிடத்திற்கும் குறைவாக அதாவது 59.9 நொடிகளில் கடந்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தினார்.

100 மீ ஃப்ரீ ஸ்டைலில் ஒரு நிமிடத் தடையை முதலில் உடைத்தெறிந்த வீராங்கனை என்ற பெருமையை டான் ஃப்ரேசர் பெற்றார்.

1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற அடுத்த ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் களமிறங்கினார் ஃப்ரேசர். இம்முறை அமெரிக்க வீராங்கனை ஷாரோன் ஸ்டௌடர் அவருக்கு கடுமையான போட்டியை விதித்தார். ஆயினும் அதனை முறியடித்து 3வது முறையாக தங்கத்தை வென்றார்.

3 ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நீச்சல் போட்டிப் பிரிவில் பங்கேற்று 3 முறையும் தங்கம் வென்ற சாதனையைப் படைத்தார் டான் ஃப்ரேசர்.

Share this Story:

Follow Webdunia tamil