ஜானட் ஈவான்ஸ்
முறியடிக்கப்படாத உலக சாதனையாளர்!
1988
சியோல் ஒலிம்பிக் போட்டியிலும், 1989 ஆம் ஆண்டு உலக நீச்சல் போட்டிகளிலும் ஜானட் ஈவான்ஸ் 400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டிகளில் உருவாக்கிய உலக சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படவில்லை!
1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள ஃபுல்லர்டன் நகரில் பிறந்த ஈவான்ஸ், இரண்டு வயதிலிருந்தே நீச்சல் குளத்தில் வளர்ந்து இயற்கையான நீச்சல் வீராங்கனையாக உயர்ந்தவர்.
1987 ஆம் ஆண்டு 15 வயதே ஆன ஈவான்ஸ், உலக நீச்சல் போட்டிகளில் 800 மீட்டரிலும், 1,500 மீட்டரிலும் குதித்து உலக சாதனைகளை ஏற்படுத்தினார். இவ்விரு சாதனைகளும் 7 ஆண்டுக்காலம் முறியடிக்கப்படாமல் நீடித்தன.
அதே ஆண்டின் பின்பகுதியில் 400 மீட்டர் நீச்சல் போட்டியில் டிரேஸி பிக்காம்ஸ் உருவாக்கிய 9 ஆண்டுக்கால உலக சாதனையை முறியடித்தார் ஈவான்ஸ்.
1988 ஆம் ஆண்டு சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக குதித்த ஈவான்ஸ் 400 மீட்டர் மெட்லியில் தங்கம் வென்றார். 3 நாட்களுக்குப் பிறகு நடந்த 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சலில் 2 நொடிகள் வித்தியாசத்தில் வென்று தனது உலக சாதனையை 1.6 நொடிகள் குறைத்தார்.
800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் கிழக்கு ஜெர்மனியின் ஆஸ்ட்ரிட் ஸ்ட்ராஸை 3 மீட்டர் வித்தியாசத்தில் வென்று மூன்றாவது தங்கத்தை வென்றார்.
1992 ஆம் ஆண்டு பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் 6 ஆண்டுக்காலம் தொடர்ந்து அப்போட்டியில் வென்ற சாதனையாளராக குதித்த ஜானட்டை ஜெர்மனி வீராங்கனை டேக்மார் ஹாஸேயை 30 செ.மீ. வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு நடந்த 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சலில் துவக்கத்திலிருந்தே முன்னிலையில் நீந்திச் சென்ற ஜானட், 8 மீட்டர் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1996 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக தனது 25வது வயதில் 800 மீட்டர் ஃப்ரீஸ்டைலில் குதித்த ஜானட்டால் 6வது இடத்தையே வெல்ல முடிந்தது.
1986 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை 400 மீட்டர் நீச்சல் போட்டிகளில் 27 சர்வதேச போட்டிகளில் 25 முறையும், 800 மீட்டரில் 23 சர்வதேச போட்டிகளில் 22 முறையும் வெற்றி பெற்றார்.
400 மீட்டர், 800 மீட்டர், 1,500 மீட்டர் நீச்சல் போட்டிகளில் இவர் உருவாக்கிய ஒலிம்பிக் சாதனைகள் இந்த ஒலிம்பிக் போட்டிகளிலாவது முறியடிக்கப்படுமா?