பழமை வாய்ந்த சென்னை மத்திய சிறைச்சாலையை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
விரைவில் இடிக்கப்பட உள்ள இந்த மத்திய சிறைச்சாலையை இடித்துவிட்டு அந்த இடத்தில் பல்வேறு அரசு பணிகள் நடைபெற உள்ளது.
இந்த நிலையில்தான் அந்த சிறைச்சாலையைப் பார்க்க பொதுமக்கள் பலரும் ஆர்வம் கொண்டனர். அதற்கு இணங்க காவல்துறையினரும் சிறைச்சாலையைச் சுற்றிப்பார்க்க பொது மக்களுக்கு அனுமதி அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கடநத் 9ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் புதுச்சேரியில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்துள்ளனர்.
முக்கியத் தலைவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைகளை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். பலர் சிறைக் கம்பிகளுக்கு பின்னார் நின்றபடி புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளனர்.
சிறைச்சாலையின் பின் பகுதியில், சிதைந்த நிலையில் கிடக்கும் தூக்குமேடையை பார்க்க பொதுமக்கள் பலரும் ஆர்வம் காட்டினர்.
சென்னை நகரம் முழுவதிலும் இருந்து, திருவிழா கூட்டம்போல் திரண்டு பொதுமக்கள் வந்ததால், சிறைச்சாலையின் உள்ளே நடமாடும் கடைகள் அதிகம் இருந்தன. அப்பகுதியில் அதிகமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
வார நாட்களில் சிறைச்சாலையை பார்க்க அனுமதித்தால் பெரும்பாலானோர் வந்து பார்க்க முடியாமல் உள்ளது. எனவே சனி மற்றும் ஞாயிறு வரை இந்த அனுமதியை நீடிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கும் செவி சாய்க்க வேண்டும் காவல்துறை.