Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சான்றோன் ஆக்குதல்.....

- ஆல்பர்ட் பெர்ணான்டோ

Advertiesment
சான்றோன் ஆக்குதல்.....
, ஞாயிறு, 15 ஜூன் 2008 (12:58 IST)
பற்று, பாசம், நேசம், உறவு இப்படி இல்லாமல் வயதுக்கு வந்து விட்டால் தாயதந்தையைப் பிரிந்து தனித்து வாழுகிறதும், அண்ணன் என்னடா? தம்பி என்னடா அவசரமாஉலகத்தில் என்று வாழுகிறதாகப் பலர் கருதுகிற அமெரிக்கத் திருநாட்டில் தான் இந்தததந்தையர் தினம் தோன்றியது! அந்த‌வ‌ர‌லாற்றில் வ‌ழுக்கி என்ன‌தான் சொல்கிற‌து என்றபார்ப்போமா?

வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்தவர்! 1862-ல் நடந்போரில் கலந்து கொண்ட பிறகு வாஷிங்டன் அருகேயுள்ள ஸ்போகனே (Spokane) வுக்ககுடும்பத்தோடு சென்று வசித்தார். மகள் சொனாரா டோட்டுக்கு 16 வயதாகும் போது மனைவி எல்லன் விக்டோரியா மரணமடைந்தார். தன் மனைவி இறந்ததும் 5 மகன்கள் மற்றும் மகள்களுடனவசித்தார். அவரை மறுமணம் செய்து கொள்ள சிலர் முன்வந்த போது மறுத்து விட்டபிள்ளைகளை வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். வாலிபம் வீணாகிறது என்றசெல்லமாகச் சொல்லி வளைத்துப் போடப் பார்த்த பெண்களின் ஆசை வார்த்தைகளுக்கஅடிமையாகி விடாமல் தம் இல்லாள் இல்லை என்ற குறை தெரியாமல், சான்றோன் ஆக்குதலதந்தைக்கு கடனே... பிள்ளைகளை வளர்த்து வாலிபமாக்கினார்.

அருமைக் கணவர் இருக்கும்போதே மனைவி இன்னொருவருடன் வாழ்வதும், வாழ்ந்தாலஉன்னோடுதான் என்று கைப்பிடித்த மனைவி இருக்கும் போதே கணவர் இன்னொரு பெண்ணுடனவாழ்வதும் அமெரிக்காவில் அங்கிங்கெனாதபடி எங்கும் அசாதாரணமாக இருக்கிற போது தமதந்தையின் வாழ்க்கையை மிகப் பெரிய தியாக வாழ்க்கையாகக் கருதினார் - மகள் ஸொனோரஸ்மார்ட் டோட்! (Sonora Smart Dodd ) திருமதி.டோட் அது மட்டுமல்ல, தமக்காக வாழாமலபிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மறைந்த தியாக சீலரான தம் தந்தையைக் கெளரவிக்க வேண்டுமஎன்று எண்ணினார்.

அந்தக் கெளரவமும் தம் தந்தையோடு நின்று விடாமல் தந்தையர் ஒவ்வொருவருக்குமஅந்தக் கெளரவிப்பு கிடைக்க வேண்டும் என்றும் திருமதி.டோட் கருதினார்.

சுய நலத்தோடு கலந்த அவரின் பொதுநலம் தம் தந்தை பிறந்த ஜூன் 19 ம் தேதியதந்தையர் தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 1909 ம் ஆண்டு எழுப்பினார். அவரின் கோரிக்கை கரு மெல்ல உருப் பெற்று 5 வருடங்கள் கழித்து 1924ல் அதிகாவர்க்கத்தின் செவிகளில் விழுந்தது. அமெரிக்காவின் அன்றைய அதிபர் கால்வின், திருமதி.டோட்டின் யோசனையை நான் ஆதரிக்கிறேன் என்றார். 1926ல் நியூயார்க் நகரிலதேசிய தந்தையர் தினக் கமிட்டி அமைக்கப்பட்டு அதன் சாத்தியம் பற்றி ஆராய்ந்தது. அதனபின் அந்த விசயம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

அதற்கும் 30 வருடங்கள் கழித்து 1956ல் கோரிக்கை தூசி தட்டப்பட்டு தந்தையரதினத்தை அங்கீகரித்து அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்தது.

அதன் பிறகும் அரசு அதிகாரப் பூர்வமாக அங்கீகரித்து அறிவிக்கவில்லை. 1966ம் ஆண்டஅமெரிக்க அதிபர் ஜான்சன் ஜூன் மாதம் 3 வது ஞாயிற்றுக் கிழமையை "தந்தையர் தினம்" எஅறிவிக்கலாம் என சட்ட முன் வடிவில் கையொப்பமிட்டார். அதற்குப் பத்து வருடங்களகழித்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாதேசிய அளவில் "தந்தையர் தினம்" அனுசரிக்கஆணை பிறப்பித்தார். தனது கோரிக்கைக் கனவபலிக்காமல் போய்விட்டதே என்ற கவலையோடு இருந்த திருமதி.டோட், அவரின் கனவு நனவான போதஅதைப் பார்த்து சந்தோஷப்பட அவர் உயிரோடு இல்லை. ஆனால் இன்றைக்கு அமெரிக்காவிலமட்டுமல்ல பெரும்பாலான நாடுகள் "தந்தையர் தினம்" என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதஅவரின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.

ரோஜா...

தந்தையர் தினத்தில் மேலை நாடுகளில் அப்பாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாவைக் கொடுத்தவாழ்த்துவதும், பிள்ளைகள் சிவப்பு ரோஜாவை தங்கள் சட்டையில் அல்லது தலையில் செருகிககொள்வதையும் வழக்கில் கொண்டுள்ளனர்!

அப்பா இயற்கை எய்தி விட்டால் தங்கள் சட்டையில் ஒரு வெள்ளை ரோஜாவை செருகிககொள்வது வழக்கம்!

இவை எல்லாவற்றையும் விட அப்பா உங்களை நான் எவ்வளவு நேசிக்கிறேன் தெரியுமா? ஏனநேசிக்கிறேன் தெரியுமா? என்று சொல்லி ஆரத்தழுவுவது வழமையான பழக்கங்களுள் முக்கியமாஒன்று!

எத்தனையோ இன்னல்கள் பட்டாலும் அதை வெளிக் காட்டாமல் துன்பத்தின் சாயல் தமபிள்ளைகள் மீது படிந்து விடாமல் அனைத்தையும் தம் தோளில் சுமந்தே கூன் விழுந்து போதந்தையர்கள். இராத்தூக்கம் பகல் தூக்கம் இன்றி வளர்த்து வாலிபமாக்க எவ்வளவதியாகங்கள் புரிந்த, புரியும் தந்தையர்கள்!

தவமாய் தவமிருந்து திரைப்படத்தில் சேரன் மகன் தந்தைக்காற்றும் கடனை மிகசசிறப்பாகச் சொல்லியிருப்பார்! கொஞ்சம் சிந்தனைகளை ஓடவிட்டுப் பாருங்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு தந்தையும் தன்னை ஆளாக்க பட்ட துயரங்கள் கொஞ்சமாவது உங்களகண்களைக் கலங்கவைக்கும்.

நீங்கள் இன்றைக்கு இருக்கும் நிலையை எண்ணிப்பாருங்கள்; நாளை இந்தச் சமுதாயமஉங்களைக் குறிப்பிடும் போது என்ன சொல்லும்? என்பதை அய்யன் வள்ளுவர் ஈராயிரமஆண்டுகளுக்கு முன்பே வெகு நேர்த்தியாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி,"இவன் தந்த
என் நோற்றான்கொல்" எனும் சொல்!

இந் நாளில் நம் தந்தையரை நாமும் இதய சுத்தியோடு அல்லவை மறந்து நல்லவை எண்ணி வாழ்த்துவோம்! வணங்குவோம். அவர் மனம் மகிழ அன்று மட்டுமாவது நேரம் ஒதுக்கி தந்தையோடு நேரத்தைச் செலவிடுவோம்.



உல‌கெங்கும் த‌ந்தைய‌ர் தின‌ம்.....!

மார்ச் 14ல் ஈரானிலும், மார்ச் 19ல் பெல்ஜியம்,பொலிவியா, ஹோண்டுராஸ், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெய்ன் மற்றும் லிச்டென்ஸ்டெய்ன் ஆகிய நாடுகளிலும், மே 8லபெற்றோர்கள் தினமாக தென்கொரியாவிலும், ஜூன் முதல் ஞயிற்றுக்கிழமை லிதுவேனியாவிலும், ஜூன் 5ல் டென்மார்க்கிலும், ஜூன் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ஆஸ்த்திரியா, ஈக்குவடார் மற்றும் பெல்ஜியத்தின் ஒரபகுதியிலும்,
ஜூன் மூன்றாவதஞாயிற்றுக்கிழமை அயர்லாந்து,அர்ஜென்டினா, அமெரிக்கா, பஹாமஸ், பங்க்ளாதேஷ், கனடா,சிலி,சீனா, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, சைப்ரஸ், பிரான்சு, கிரீஸ், கயானா, ஹாங்காங், இந்தியா, ஜமைக்கா, ஜப்பான், மலேசியா, மால்டா,மொரீசியஸ், மெக்சிகோ, நெதர்லாந்து, பாகிஸ்தான், பனாமா, பாராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், போர்டோ ரிக்கோ, சிங்கப்பூர், ஸ்லோவாகியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, டிரினிடாட் மற்றும் துருக்கி, வெனிசூலா மற்றும் ஜிம்பாப்வே.

ஜூன் 23 நிகார‌குவா, போல‌ந்து, உகாண்டா.
ஜூலை 30ல் விய‌ட்நாம்.
ஜூலஇர‌ண்டாவ‌து ஞாயிற்றுக்கிழ‌மை உருகுவே.
ஜூலை க‌டைசி ஞாயிற்றுக்கிழ‌மடொமினிய‌ன்ரிப‌ப்ளிக்/
ஆக‌ஸ்ட் இர‌ண்டாவ‌து ஞாயிற்றுக்கிழ‌மப்ரேசில்.
ஆக‌ஸ்ட் 8ல் தைவான்.
செப்டெம்ப‌ர் முத‌ல் ஞாயிற்றுக்கிழ‌மஆஸ்திரேலியா ம‌ற்றும் நியூசிலாந்து.
செப்டெம்ப‌ர் 11ல் நேபாள்.
அக்டோப‌ரமுத‌ல் ஞாயிற்றுக்கிழ‌மை ல‌க்ச‌ம்ப‌ர்க்.
ந‌வ‌ம்ப‌ர் இர‌ண்டாம் ஞாயிற்றுக்கிழ‌மஎஸ்டோனியா, பின்லாந்து, நார்வே ம‌ற்றும் ஸ்வீட‌ன்.
டிச‌ம்ப‌ர் 5ல் தாய்லாந்தஆகிய‌நாடுக‌ள் த‌ந்தைய‌ர் தின‌த்தை அம‌ர்க்க‌ள‌மாக‌க் கொண்டாடுமநாடுக‌ளாகும்.

Share this Story:

Follow Webdunia tamil