இந்தியாவின் சொத்தான கோகினூர் வைரத்தை இந்தியாவிடமே திரும்ப ஒப்படைத்து விட இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகத்திலேயே மிகப்பெரிய வைரமாக கருதப்படுவது கோகினூர் வைரம். இது 105 காரட் எடை உள்ளது. அதாவது 21 கிலோ எடை உள்ளது. இந்த வைரம் பல்வேறு மொகலாய மன்னர்களின் கிரீடங்களையும், பல பாரசீக மன்னர்களின் கிரீடங்களையும் அலங்கரித்த இந்த வைரத்தை கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றியது.
1877-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி விக்டோரியாவை இந்தியாவின் சக்கரவர்த்தினியாக இங்கிலாந்து பிரதமர் டிஸ்ரேலி பிரகடனம் செய்தார். அப்போது அந்த வைரம் ராணி விக்டோரியாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த வைரத்தை இந்தியாவிடம் திருப்பி கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்து உள்ளது. காந்தியின் பேரனும், காந்தி அறக்கட்டளை தலைவருமான துஷார் காந்தி இந்த வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசிடம் கோரி இருக்கிறார். இதற்காக இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரி இருக்கிறார்.