்
நிலையில் இருந்த மோகினியாட்டத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியாக மணக்குளம் முகுந்த ராஜா, கவிஞர் வலத்தோள் நாராயண மேனன் ஆகியோர், 1930 களில் கேரள கலமண்டலத்தில் மோகினியாட்டப் பயிற்சியைத் துவக்கியபோது, அவர்களிடம் பயின்ற முதல் மாணவி தங்கமணி ஆவார்.
திருமணத்திற்குப் பிறகு கோபிநாத்தின் துணையாகவும், உடன் ஆடுபவராகவும் மாறினார். மாணவர்களுக்குத் தங்கமணி கொடுத்த கடுமையான பயிற்சியும், கோபிநாத்திற்கு அவர் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பும்தான் கோபிநாத் சாதனைகளுக்கு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் பிறந்தனர்.
பரதநாட்டியக் கலைஞரும், சமூகப் பண்பாட்டுப் பணியாளருமான வசந்தி கோபிநாத் ஜெயஸ்வால் மூத்த மகள் ஆவார். இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வருகிறார்.
ஒரே மகன் ஜி.வேணுகோபால் கேரளத்தில் வசிக்கிறார்.
மகள் விலாசினி ராமச்சந்திரன் குஜராத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றிபெற்று, தற்போது பரோடாவில் பணிபுரிகிறார்.
இளைய மகள் வினோதினி சசிமோகன், 1960 களில் கேரளத் திரைப்படத் துறையில் குழந்தை நட்சத்திரமாக பரிணமித்தார். தற்போது திருவனந்தபுரம் விஸ்வகலாகேந்திராவில் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிகிறார்.முக்கியச் சீடர்கள்!குரு கோபால கிருஷ்ணன், குரு சந்திரசேகரன், நடன ஆசிரியர் தங்கப்பன் (நடிகர் கமல்ஹாசனின் குரு), நடன ஆசிரியர் சுந்தரம் (நடிகர் பிரபுதேவாவின் தந்தை), கேசவதேவ், பாலன் மேனன், திருவாங்கூர் சகோதரிகள்- லலிதா, பத்மினி, ராகினி, யாமினி கிருஷ்ணமூர்த்தி, அம்பிகா, சுகுமாரி, சேதுலட்சுமி, நடன ஆசிரியர் செல்லப்பன், பவானி, பேராசிரியர் சங்கரன் குட்டி, வேணுஜி, பாஸ்கர், ரஞ்சனா, சுப்பையா, வேலானந்தன்,வசந்தசேனா, ஹெய்டி புரூடர், நடன இயக்குநர் வாசு, ரகுராம்.
விருதுகளும் பாராட்டுக்களும்!1.
கொல்கத்தாவில் நடந்த வங்காள இசை மாநாட்டில் அபிநவ நடராஜா விருது - 1934. 2.
திருவாங்கூர் மகாராஜாவின் ஆஸ்தான நடனக்கலைஞர் - 1936. 3.
கேரள சமாஜத்தின் சார்பில் சென்னையில் நடந்த அனைத்து மலையாளி மாநாட்டில் நடன கலாநிதி விருது - 1936.
4.
டெல்லியில் நடந்த அனைத்து மலையாளி கலை விழா மற்றும் இந்திய நாடகக் கலைஞர்கள் கூட்டமைப்பு மாநாட்டில் 'குரு' விருது - 1948. 5.
குருவாயூர் தேவஸ்தானத்திடம் இருந்து கலா திலகம் பட்டம் - 1968. 6.
கொல்கத்தா ரபீந்திர பாரதி பல்கலைக்கழத்திடம் இருந்து டி.லிட் பட்டம் - 1972. 7.
கேரள சங்கீத நாடக அகாடமி விருதுகள். 8.
திருவாங்கூர் தேவசம் வாரியத்திடம் இருந்து கலா ரத்னம் விருது - 1972. 9.
கேரள சங்கீத நாடக அகாடமியின் ஃபெல்லோஷிப் விருது - 1973. 10.
புது டெல்லி சங்கீத நாடக அகாடமி விருது.பதிப்புக்கள்!1.
அபிநயான்குரம் (மலையாளம்). 2.
கிளாசிக்கல் டான்ஸ் போசஸ் ஆஃப் இந்தியா (ஆங்கிலம்) 3.
என்ட ஜீவித ஸ்மரனகள் (மலையாளத்தில் சுயசரிதை) 4.
கதகளி நடனம் (மலையாளம்)5.
அபிநய பிரகாசிகா (சமஸ்கிருதம், ஆங்கிலம்)6.
நடன கைரளி (மலையாளம்) 7.
தாளமும் நடனமும் (மலையாளம்)
குரு கோபிநாத் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நடனம் புரிந்துள்ளார். 1954 இல் சுதந்திர இந்தியாவில் இருந்து சோவியத் யூனியனுக்குச் சென்ற முதல் கலாச்சாரக் குழுவில் உறுப்பினராக இருந்தார்.
1961 இல் பின்லாந்தில ஹெல்சின்கி -யில் நடந்த எட்டாவது உலக இளைஞர் மாநாட்டில் பண்பாட்டு நடனப் போட்டிகளுக்கு நடுவராக அழைக்கப்பட்டார்.