ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 4, 13, 22, 31

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (18:31 IST)
ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. மற்றவர்களுக்காக வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் குறையலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு  உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்  தாமதம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை தீரும். ஆனால் வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் சம்பந்தப்பட்ட காரியங்கள் சரிவர நடக்காமல் தடைதாமதம் ஏற்படலாம்.

பெண்களுக்கு மனத்திருப்தியுடன் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினர் திட்டமிட்டு காரியங்களை செய்து வெற்றி காண்பீர்கள். அரசியல்துறையினர் வீண் அலைச்சலும், மன சோர்வும் உண்டாகும். மேலிடத்தின் செயல்கள் நிம்மதியை பாதிப்பதாக இருக்கும். மாணவர்களுக்கு: எதிர்கால கல்வி பற்றி எடுத்த முடிவுகள் மனதிருப்தியை அளிக்கும். அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை வணங்கி வர எதிர்ப்புகள் அகலும். துன்பங்கள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments