ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28

திங்கள், 1 ஜூலை 2019 (18:25 IST)
ஜூலை மாத எண் ஜோதிடப் பலன்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

எதைப்பற்றியும் கவலைப்படாமல் திடமானமுடிவுடன் வேலை செய்யும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் காரியங்களில் இருந்த தாமதமான போக்கு நீங்கும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும்.

பெண்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு இழுபறி நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். அரசியல்துறையினருக்கு மேலிடத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம்.  நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். மாணவர்களுக்கு  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.

பரிகாரம்: சிவபெருமானை நெய் தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கோவிலுக்கு செல்லும்போது கட்டாயம் தங்க நகை போடவேண்டுமா...?