Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2017 (19:16 IST)
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழி வகைகள் கிடைக்கும். 


 

 
மாற்று யோசனைகள் மனதில் உதிக்கும். நல்லவர்களின் நட்பும் தக்க நேரத்தில் உதவிகரமாக இருக்கும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். செல்லுமிடமெல்லாம் தரிசனம் சிறப்பாக கிடைக்கும். என்றாலும் மனதிலே சின்ன சின்ன சஞ்சலங்கள், எதிலும் பிடிப்பற்ற நிலை, ஆர்வமின்மை வந்துப் போகும். 
 
யாரும் தன்னுடன் முழு அன்புடனோ, பாசத்துடனோ நடந்துக் கொள்ளவில்லை எல்லோரும் நடக்கிறார்கள் என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து புது வேலை அமையும். வாகன வசதிப் பெருகும். 
 
பழுதான டி. வி. , ஃப்ரிட்ஜை மாற்றுவீர்கள். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சொத்து வாங்குவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மகள் உங்களைப் புரிந்துக் கொள்வாள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். 
 
அரசியல்வாதிகளே! மேலிடம் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். 
 
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில திட்டங்கள் தீட்டுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வி. ஐ. பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி வரும். அதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பாராட்டுகளும் கிடைக்கும். 
 
கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விடாமுயற்சியால் விட்டதைப் பிடிக்கும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 3, 9, 12
அதிஷ்ட எண்கள்: 4, 9
அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments