Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

Advertiesment
செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23
, திங்கள், 4 செப்டம்பர் 2017 (19:00 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் சாதுர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.


 


விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு வாங்குவது, கட்டுவதற்கு வங்கிக் கடன் உதவி கிட்டும். சிலர் வீடு மாறுவீர்கள்.

ஆனால் ஒருவித சோர்வு, களைப்பு, படபடப்பு வந்துப் போகும். சில விஷயங்களில் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணமோ என்றெல்லாம் வருந்துவீர்கள். பல் வலி, வாய் புண், செரிமானக் கோளாறு, அசிடிட்டி தொந்தரவுகள் வரக்கூடும். 
 
பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பணவரவு திருப்திகரமாக இருக்கும் என்றாலும் திடீர் செலவுகளால் கைமாற்றாக, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். உங்களிடம் திறமை குறைந்து விட்டதாக நினைத்துக் கொள்வீர்கள். 
 
அரசியல்வாதிகளே! வீண் விமர்சனங்களை தவிர்த்து, செயலில் அக்கறை காட்டுங்கள். 
 
கன்னிப் பெண்களே! கனவுகள் நனவாகும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். கமிஷன், புரோக்கரேஜ், கல்வி நிறுவனங்களால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்த்தாலும் மூத்த அதிகாரியை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். 
 
கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகள் அனைவராலும் பாராட்டப்படும். அலைச்சலுடன் ஆதாயமும் தரும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 5, 15, 24
அதிஷ்ட எண்கள்: 2, 8
அதிஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம், ஆரஞ்சு
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செப்டம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31