Publish Date: Wed, 01 Sep 2021 (15:08 IST)
Updated Date: Wed, 01 Sep 2021 (15:09 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
எந்த ஒரு விஷயத்தையும் சாதகமா பாதகமா என்று முன்கூட்டியே யூகித்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ளும் திறமையுடைய நான்காம் எண் அன்பர்களே, இந்த மாதம் வீண் செலவுகள் குறையும் எந்த ஒரு வேலையை செய்து முடிப்பதிலும் இருந்த தடை தாமதம் நீங்கும். வருமானம் கூடும். மன திருப்தி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் இருந்த தாமதம் நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலிடத்துடன் கனிவை அணுசரிப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு தேவையற்ற செலவு ஏற்படலாம். கலைத்துறையினருக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
அரசியல்துறையினருக்கு மேலிடம் நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களை சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் உண்டாகும்.
பரிகாரம்: திங்கள்கிழமை அன்று ஆதிபராசக்தியை வழிபடுவது காரிய தடை களை நீக்கும். மன அமைதியை தரும்.