Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

Advertiesment
அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (17:45 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

பதவிகள் தேடி வரும். புது வேலைக் கிடைக்கும். பிதுர்வழி சொத்துகள் சேரும். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வரைபட அனுமதி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.
 
இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின்புதிதாக வாங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். என்றாலும் கட்டை விரல், கண் புருவம், கால் மூட்டில் அடிப்படும். சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகள் எடுக்காதீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். மூத்த அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 5, 6, 17, 23, 24
அதிஷ்ட எண்கள்: 3, 5
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், வெளிர் நீலம் 
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31