Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

Advertiesment
அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30
, வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (17:05 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதம் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். ஷேர் மூலம் லாபம் வரும்.

பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அழகு, இளமைக் கூடும். ஓரளவு பணவரவு உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். சகோதரருக்கு இருந்த பிரச்னை தீரும். காலி இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும்.
 
மாதத்தின் மையப் பகுதியில் பல விஷயங்களையும் போராடி முடிக்க வேண்டி வரும். மற்றவர்களை நம்பி பெரிய வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். கடந்த ஓராண்டு காலமாக லாப வீட்டில் நின்றிருந்த ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். அரசியல்வாதிகளே! சகாக்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம்.
 
கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடர வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வர வேண்டிய சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத் திறன் வளரும். புதிய திட்டங்கள் நிறைவேறும் மாதமிது.  
 
அதிஷ்ட தேதிகள்: 3, 12, 10, 12, 27
அதிஷ்ட எண்கள்: 1, 4
அதிஷ்ட நிறங்கள்: ஊதா, க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29