9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அதிரடி முன்னேற்றம் உண்டாகும்.
அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேலைக் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு, யோகம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வீடு கட்ட வங்கி லோன் கிடைக்கும்.
புதிதாக ஃப்ரிட்ஜ், டி.வி வாங்குவீர்கள். தடைப்பட்ட வேலை முடியும். வீடு, மனை சேரும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். ஆனால் பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல், கல்வி, உத்யோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பால்ய நண்பர்கள் தேடி வருவார்கள். அரசு வேலைகளை அலைந்து முடிக்க வேண்டி வரும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளே! சகாக்களுடன் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னிப் பெண்களே! எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வியாபாரம் சூடுபிடிக்கும். அதிரடி அறிவிப்புகளால் லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுடன் இடமாற்றம் உண்டு. கலைத்துறையினர்களே! அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 3, 6, 12, 24
அதிஷ்ட எண்கள்: 2, 7
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, நீலம்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி