Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 8, 17, 26

Advertiesment
செப்டம்பர்
, திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (16:17 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

வி.ஐ.பிகளின் உதவியால் தடைப்பட்ட சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். என்றாலும் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய பிரச்சனைகள் தலைதூக்கும்.
 
மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வீண் செலவு, டென்ஷன் குறையும். வர வேண்டிய பணம் கைக்கு வரும் வெளியூர் பயணங்களால் பலனடைவீர்கள். பழைய சொந்த-பந்தங்களை சந்தித்து மகிழ்வீர்கள். குலதெய்வக் கோவிலில் நேர்த்திக் கடனை முடிப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். மாதத்தின் பிற்பகுதியில் வீண் அலைச்சல், முதுகு வலி, வயிற்று கடுப்பு, சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். சகோதர வகையில் சச்சரவுகள் வரும்.
 
கன்னிப் பெண்களே! யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். அரசியல்வாதிகளே! ஆதாரமில்லாமல் எதிர்கட்சிக்காரர்களை விமர்சித்து பேசாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரியுடன் பனிப்போர் வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். சகிப்புத் தன்மையால் சாதிக்கும் மாதமிது.   
 
அதிஷ்ட தேதிகள்: 5, 14, 23, 24, 26   
அதிஷ்ட எண்கள்: 3, 6
அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளம்சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

Share this Story:

Follow Webdunia tamil