Publish Date: Mon, 31 Aug 2015 (16:14 IST)
Updated Date: Mon, 31 Aug 2015 (16:25 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் இழுபறி நிலை மாறும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள்.
பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். சகோதர பகை நீங்கும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பணவரவு உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதரர் உதவுவார். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்கள் இனி உங்களை மதிப்பார்கள். ஆனால் மனஉளைச்சல், வாக்குவாதம், வீண் டென்ஷன் வரக்கூடும். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள்.
கன்னிப் பெண்களே! காதல் கைகூடும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். கலைத்துறையினர்களே! மதிப்பு, மரியாதைக் கூடும். போராட்டங்கள் முடியும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 7, 2, 6, 15, 25
அதிஷ்ட எண்கள்: 1, 8
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி