Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 5, 14, 23

Advertiesment
செப்டம்பர்
, திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (16:09 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். திடீர் யோகம் உண்டாகும்.

ஓரளவு பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்து கொள்வார். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள் ஆனால் யாருக்கும் கேரண்டர் கையெழுத்துப் போட வேண்டாம்.
 
வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். என்றாலும் வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வீடு கட்ட லோன் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கோவில் திருவிழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் கவுரவப் பதவிகள் தேடி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.
 
கன்னிப் பெண்களே! தடுமாறிக் கொண்டிருந்த உங்கள் மனசு தெளிவடையும். கசந்த காதல் இனிக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். வெற்றியாளர்களை சந்திக்கும் மாதமிது. 
  
அதிஷ்ட தேதிகள்: 5, 15, 14, 23, 24   
அதிஷ்ட எண்கள்: 6, 8
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் 
அதிஷ்ட கிழமைகள்: சனி, புதன்

Share this Story:

Follow Webdunia tamil