Publish Date: Mon, 31 Aug 2015 (16:07 IST)
Updated Date: Mon, 31 Aug 2015 (16:24 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள்.
அரைக்குறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். எதிர்ப்புகள் குறையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.
வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். சாதுக்கள் உதவுவார்கள். என்றாலும் சில நேரங்களில் கண் எரிச்சல் அதிகமாகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள்.
கன்னிப் பெண்களே! அவசரப்பட்டு முடிவுகளை எடுக்காமல் பெற்றோரை கலந்தாலோசியுங்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார். விடாபிடியாக செயல்பட்டு விட்டதை பிடிக்கும் காலமிது.
அதிஷ்ட தேதிகள்: 4, 1, 8, 17, 26
அதிஷ்ட எண்கள்: 5, 9
அதிஷ்ட நிறங்கள்: சில்வர்கிரே, ரோஸ்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்