Publish Date: Mon, 31 Aug 2015 (16:05 IST)
Updated Date: Mon, 31 Aug 2015 (16:24 IST)
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதம் உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீடு, மனை வாங்க கடன் உதவி கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள்.
தூக்கமின்மை, சோர்வு, அசதி நீங்கும். கெட்ட கனவுகள் விலகும். சகோதரங்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். என்றாலும் முன்கோபம் அதிகமாகும். மாதத்தின் பிற்பகுதியில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது.
கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். உடல் நலத்தில் கவனம் தேவை. அயல்நாட்டிலிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். புது பங்குதரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்த்த படி அமையும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். தொட்டது துலங்கும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 3, 9, 10, 12, 21
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி