Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப்டம்பர் மாத எண் ஜோதிட பலன்கள் - 2, 11, 20, 29

Advertiesment
செப்டம்பர்
, திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (16:00 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டாகும்.

தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். கண், காது வலி நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். டென்ஷன், படபடப்பு குறையும். சொத்து தகராறு தீரும். ஆனால் சகோதர வகையில் அலைச்சல், செலவு, மனைவிக்கு சிறுசிறு அறுவை சிகிச்சை வந்து நீங்கும். என்றாலும் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.
 
உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாதம் விலகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். வேற்றுமதம், மொழியினரால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்துக் கொள்வார்.
 
கன்னிப் பெண்களே! முகப்பரு, தேமல் நீங்கும். தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. பழைய வேலையாட்கள், பங்குதாரர்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டு ஆறுதல் தரும். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைக்கட்டும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 2, 16, 15, 25, 
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: வெளிர்நீலம், பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

Share this Story:

Follow Webdunia tamil