Publish Date: Mon, 31 Aug 2015 (15:41 IST)
Updated Date: Mon, 31 Aug 2015 (16:23 IST)
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்கள் செயலில் வேகம் கூடும். எதிர்பார்த்த பணம் வரும்.
வாகனத்தை மாற்றுவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகளை கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். மனைவிவழியில் நல்லது நடக்கும். குலதெய்வக் கோயில் சென்று வருவீர்கள்.
புது வேலை அமையும். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். அயல்நாட்டு பயணங்கள் உண்டு. தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்- இருந்தாலும் வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். வீட்டை விரிவுப்படுத்திக் கட்ட முடிவெடுப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரகள் உதவுவார்கள்.
கன்னிப் பெண்களே! பெற்றோரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில திட்டங்களை தீட்டுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் இழுத்துப் போட்டு செய்வீர்கள். மேலதிகாரி மதிப்பார். கலைத்துறையினர்களே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். புது முயற்சிகளில் வெற்றி காணும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 10, 12, 21
அதிஷ்ட எண்கள்: 2, 6
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, ஊதா
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்