Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-8,17,26

Advertiesment
அக்டோபர்
, புதன், 30 செப்டம்பர் 2015 (19:59 IST)
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் உங்களின் இலக்கை போராடி எட்டிப் பிடிப்பீர்கள். 
 
வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கூடாப் பழக்கம் விலகும். அடகு வைத்திருந்த நகையை மீட்பீர்கள். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். மனைவியுடன் கருத்து மோதல்கள், அவருக்கு தலைச்சுற்றல், கர்பப்பை வலி வந்து விலகும். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். 
 
அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களால் இருந்த பிரச்னைகள் நீங்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. 
 
கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் வழிகாட்டல் மூலம் வெற்றியடைவீர்கள். தன் பலம், பலவீனத்தை உணரும் மாதமிது.    
 
அதிஷ்ட தேதிகள்:5,6,8,15,17
அதிஷ்ட எண்கள்:2,4
அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை,மயில்நீலம்
அதிஷ்ட கிழமைகள்:வியாழன்,சனி

Share this Story:

Follow Webdunia tamil