Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

Advertiesment
நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26
, திங்கள், 31 அக்டோபர் 2016 (17:08 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் எதிலும் வெற்றி, லாபம் கிட்டும். சாணக்கியத்தனமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். புதிய ஆடை, அணிகலன்கள் சேரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெகுநாட்களாக போக நினைத்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
 
அரசால் ஆதாயம் உண்டு. சிலருக்கு அயல்நாட்டில் வேலைக் கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். திடீர் யோசனைகள் பிறக்கும். உறவினர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். மாதத்தின் முற்பகுதியில் எதிலும் ஒருவித தயக்கம், சிலர் மீது நம்பிக்கையின்மை, எதிலும் ஆர்வமின்மை வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் தங்களின் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும். சமயோஜித புத்தியால் சாதிக்கும் மாதமிது.                               
 
அதிஷ்ட தேதிகள்: 8, 6, 23, 24, 26
அதிஷ்ட எண்கள்: 2, 5
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், க்ரீம் வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25