Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-1, 10, 19, 28

Advertiesment
நவம்பர்
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் அனுபவ அறிவால் சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பிள்ளைகளால் மரியாதைக் கூடும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புது வாகனம் வாங்குவீர்கள். என்றாலும் மனைவிக்கு இடுப்பு வலி,  கழுத்து வலி வந்து நீங்கும்.

மையப்பகுதியிலிருந்து செல்வாக்குக் கூடும். மகனுக்கு வெளிநாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை அமையும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். சகோதரி உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார். மாதத்தின் பிற்பகுதியிலிருந்து கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். கோவில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர். முகப்பரு,  தூக்கமின்மை விலகும்.

அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும். நினைத்ததை முடிக்கும் மாதமிது. 
 
அதிர்ஷ்ட தேதிகள்:1, 3, 5, 18, 30
அதிர்ஷ்ட எண்கள்:3, 6
அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட கிழமைகள்:புதன், சனி

Share this Story:

Follow Webdunia tamil