Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-2, 11, 20, 29

Advertiesment
நவம்பர்
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் இழுபறியாக இருந்த காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கட்டிடப் பணியை தொடங்குவீர்கள். பெற்றோரின் உடல் நலம் சீராகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைக் கூடி வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.

அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்திகள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வீண் அலைச்சல்,  டென்ஷன்,  தூக்கமின்மை வந்து நீங்கும்.

யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். கன்னிப் பெண்களே! உயர்கல்வியை தொடர்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்தித்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பனிப்போர் நீங்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர்களே! தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிற்பகுதியில் சாதிக்கும் மாதமிது.  
 
அதிர்ஷ்ட தேதிகள்:2, 7, 6, 15, 16
அதிர்ஷ்ட எண்கள்:1, 9
அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள், இளஞ்சிவப்பு 
அதிர்ஷ்ட கிழமைகள்:ஞாயிறு, வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil