Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-4, 13, 22, 31

Advertiesment
நவம்பர்
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தன்னம்பிக்கை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக இருப்பார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். திருமணம்,  சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொந்தங்கள் தேடி வரும். என்றாலும் வாகன விபத்து,  வீண் டென்ஷன் வந்துப் போகும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். மாதத்தின் ஆனால் உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த மூத்த அதிகாரி இடம் மாறுவார். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அதிகாரி உங்களை மதிப்பார். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். ரகசியங்களை காக்க வேண்டிய மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்:4, 6, 15, 22, 24
அதிர்ஷ்ட எண்கள்:3, 7
அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர்கிரே, ப்ரவுன் 
அதிர்ஷ்ட கிழமைகள்:ஞாயிறு, திங்கள்

Share this Story:

Follow Webdunia tamil