Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-5, 14, 23

Advertiesment
நவம்பர்
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதத்தில் உங்கள் பேச்சில் கனிவுக் கூடும். பிரபலங்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தீரும். மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள்.

வேற்று மொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. சகோதரியின் திருமணத்தை முன்னின்று முடிப்பீர்கள். பாதிபணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். ஆன்மிக பயணங்கள் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். தாய்வழி உறவினர்களின் அன்புத்தொல்லைகள் விலகும். என்றாலும் விமர்சனங்களும்,  தாழ்வுமனப்பான்மையும் வந்துப் போகும்.

பணம்,  நகையை கவனமாக கையாளுங்கள். கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! அதிரடியாக செயல்பட்டு தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். நம்பிக்கைக்குறியவர்களுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். என்றாலும் கொஞ்சம் கவனமாக செயல்படப்பாருங்கள். கலைத்துறையினர்களே! புகழடைவீர்கள். சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறும் மாதமிது.    
 
அதிர்ஷ்ட தேதிகள்:5, 6, 8, 17, 23
அதிர்ஷ்ட எண்கள்:4, 6
அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ், மயில்நீலம் 
அதிர்ஷ்ட கிழமைகள்:செவ்வாய், வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil