Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-6, 15, 24

Advertiesment
நவம்பர்
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். திடீர் பணவரவு உண்டு. வீடு,  வாகன வசதிப் பெருகும். கல்யாண விஷயங்கள் சாதகமாக முடியும். சொத்து வாங்குவது,  விற்பதில் இருந்த வில்லங்கம் விலகும். அரசால் ஆதாயம் உண்டு.

தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து டென்ஷன்,  வேலைச்சுமை,  நண்பர்களுடன் நெருடல் வந்து நீங்கும். விருந்தினர்களின் வருகையால் வீட்டுச் செலவு கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. கன்னிப் பெண்களே! புது வேலை கிடைக்கும். பெற்றோருடன் இருந்த மோதல்கள் விலகும்.

அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்,  வாங்கலில் நிம்மதி ஏற்படும். மறைமுக போட்டிகள் இருந்தாலும் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தடைகள் உடைபடும் மாதமிது.  
 
அதிர்ஷ்ட தேதிகள்:4, 6, 13, 14, 26
அதிர்ஷ்ட எண்கள்:1, 3
அதிர்ஷ்ட நிறங்கள்:வைலெட், பிஸ்தாபச்சை
அதிர்ஷ்ட கிழமைகள்:புதன், சனி

Share this Story:

Follow Webdunia tamil