Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள்-7, 16, 25

Advertiesment
நவம்பர்
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் ஓரளவு பணப்புழக்கம் உண்டு. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து முதுகு வலி,  சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும்.

வீடு,  வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர வகையில் மனவருத்தம் வந்து நீங்கும். பிள்ளைகளால் அலைச்சல்,  செலவுகள் வந்துப் போகும். பூர்வீகச் சொத்தில் பிரச்னைகள் வரக்கூடும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். ஹிந்தி,  தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வீண் சந்தேகம்,  மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தங்க ஆபரணங்களை இரவல் தர வேண்டாம்.

கன்னிப் பெண்களே! தூக்கமின்மை,  தோலில் நமைச்சல் வந்து விலகும். அரசியல்வாதிகளே! யதார்த்தமாக நீங்கள் பேசுவதை எதிர்கட்சிக்காரர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். பங்குதாரர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போங்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். கலைத்துறையினர்களே! எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் மாதமிது.
 
அதிர்ஷ்ட தேதிகள்:7, 2, 6, 11, 20
அதிர்ஷ்ட எண்கள்:5, 9
அதிர்ஷ்ட நிறங்கள்:நீலம், பிங்க்
அதிர்ஷ்ட கிழமைகள்:ஞாயிறு, வெள்ளி

Share this Story:

Follow Webdunia tamil