Publish Date: Fri, 31 Oct 2014 (11:38 IST)
Updated Date: Fri, 31 Oct 2014 (11:40 IST)
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புதிய முயற்சிகள் யாவும் நிறைவேறும். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அழகு, இளமைக் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளிடம் மறைந்திருந்த திறமைகளை இனம்கண்டறிவீர்கள். நவீன ரக ஆடியோ, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள்.
வீட்டில் கூடுதலாக ஒரு அறைக்கட்டுவீர்கள். மகனுக்கு உங்கள் ரசனைக்கேற்ற மணப் பெண் அமையும். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். சகோதரிக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையும். முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். டிரஸ்ட், சங்கங்கள் தொடங்குவீர்கள். கோவிலில் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். கன்னிப் பெண்ளே! தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோருக்கு சில ஆலோசனைகள் வழங்குவீர்கள்.
அரசியல்வாதிகளே! பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். சலிப்பு, சோர்வு, பல் வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிரடியாக வேலையாட்களை மாற்றுவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.
அதிர்ஷ்ட தேதிகள்:5, 8, 14, 15, 26
அதிர்ஷ்ட எண்கள்:4, 7
அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன், க்ரீம் வெள்ளை
அதிர்ஷ்ட கிழமைகள்:திங்கள், சனி