Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 8 April 2025
webdunia

மே 2022 - 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

Advertiesment
மே
, வியாழன், 5 மே 2022 (10:27 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
காந்தம் இழுப்பது போல் எவரையும் தம்பால் இழுத்துக்கொள்ளும் சக்தி படைத்த ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்யம் உண்டாகும். பணவரவும் இருப்பதுடன் பயணங்கள் செல்லவும் நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் புத்தி சாதூரியத்தால் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனதிருப்தி காண்பார்கள். அலுவலகம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.  பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரும். பயணங்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபட்டு படிப்பீர்கள். கல்வி தொடர்பான பயணங்கள் ஏற்படும்.
 
பரிகாரம்: துர்க்கை அம்மனை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே 2022 - 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...