Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

மே மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29

Advertiesment
மே
, செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (18:17 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மற்றவர்களை அறிந்து அவர்களுக்கேற்ப நடந்து கொண்டு காரியம் சாதிக்கும் திறமை உடைய இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்ப்புகள் அகலும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று விரதம் இருந்து அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட எல்லா நன்மையும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் கூடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மே மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28