4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளுமளவிற்கு பணம் வரும்.
நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புது சொத்து சேரும்.
அரசால் அனுகூலம் உண்டு. என்றாலும் பிள்ளைகளை அதிகம் செலவு செய்து அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பணபலம் உயரும். ஷேர் லாபம் தரும். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும். புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள்.
உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். வெளிநாடு, அண்டை மாநிலங்கள் செல்லும் வாய்ப்பு வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள்.
அரசியல்வாதிகளே! கட்சி தலைமை உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். முரண்டுப் பிடித்த வேலையாட்கள் கச்சிதமாக வேலையை முடிப்பார்கள். பங்குதாரர்கள் ஆதரிப்பார்கள். உத்யோகத்தில் இருந்த அலட்சியப் போக்கு மாறும். மேலதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள்.
கலைத்துறையினர்களே! வருமானம் உயர வழி பிறக்கும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 4, 8, 15, 17, 26
அதிஷ்ட எண்கள்: 1, 6
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, ஆரஞ்சு
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், சனி