Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25
, ஞாயிறு, 28 பிப்ரவரி 2016 (18:09 IST)
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் எதிர்பார்த்ததெல்லாம் எளிதில் முடியும். குடும்பத்தில் நல்லது நடக்கும்.
 
எந்த பதிலும் வராமலிருந்த வரன் வீட்டாரிடமிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தின் பழுதான பாகங்களை மாற்றி புதிதாக்குவீர்கள். சிலர் வீட்டை விரிவுப்படுத்திக்கட்டுவீர்கள். வீடு வாங்குவதற்கு வங்கி லோன் கடன் கிடைக்கும். சொந்த ஊரில் செல்வாக்குக் கூடும். என்றாலும் பழையக் கடனை நினைத்து அவ்வப்போது கவலைப்படுவீர்கள்.
 
மாதத்தின் முற்பகுதியில் உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். சொத்து விவகாரங்களில் சுமுகமான தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவார்கள். சாகாக்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோரை கலந்தலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் விலகும்.
 
கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். தொலை நோக்குச் சிந்தனையால் வெற்றி பெறும் மாதமிது. 
 
அதிஷ்ட தேதிகள்: 7, 6, 20, 15, 24 
அதிஷ்ட எண்கள்: 4, 7
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், ஊதா
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி

Share this Story:

Follow Webdunia tamil