6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
உறவினர்களின் ஆதரவு உண்டு. கல்யாண பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் முடியும். மனைவி வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் உதவுவார்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள்.
பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். மாதத்தின் மையப்பகுதியில் அலர்ஜி, கை, கால் வலி, சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல் வந்துச் செல்லும். தங்க நகைகள் இரவல் வாங்குவதை தவிர்க்கவும். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் ஆர்வம் காட்டாதீர்கள்.
கன்னிப் பெண்களே! நல்லவர்களின் நட்பு கிடைக்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் இழந்த லாபத்தை மீண்டும் பெறுவீர்கள். வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஒரு பக்கம் அதிகரித்தாலும் மற்றொரு பக்கம் உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
கலைத்துறையினரே! எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும். விடாமுயற்சியால் இலக்கை எட்டும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 6, 8, 17, 24
அதிஷ்ட எண்கள்: 3, 5
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பழுப்பு
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி