Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23
, ஞாயிறு, 28 பிப்ரவரி 2016 (17:53 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் நினைத்தது நிறைவேறும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமுண்டு.
 
மகளுக்கு திருமணம் செய்ய பல முயற்சிகள் எடுத்தும் தடைபட்டு வந்ததே! இனி கல்யாணம் நடக்கும். அவ்வப்போது எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்தாதீர்கள். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து பழைய பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள்.
 
வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். குழந்தை பாக்யம் உண்டு. புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடம் பரிசீலிக்கும்.
 
கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும். போராடி நல்ல நிறுவனத்தில் வேலையில் அமர்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையறிந்து புது சரக்குகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி புகழ்ந்து பேசுவார். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். கலைத்துறையினரே! பழைய வாய்ப்புகள் மீண்டும் தேடி வரும். வசீகரப் பேச்சாலும், வளைந்து கொடுப்பதாலும் சாதிக்கும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 5, 14, 15, 23, 24   
அதிஷ்ட எண்கள்: 2, 4
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
அதிஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்

Share this Story:

Follow Webdunia tamil