Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31
, ஞாயிறு, 28 பிப்ரவரி 2016 (17:44 IST)
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாததத்தில் இழப்புகள், எதிர்ப்புகளை எளிதாக சமாளிப்பீர்கள். தெய்வ வழிபாடு அதிகரிக்கும்.

பழைய பிரச்சனைகள் தீரும். சொத்து சேர்க்கை உண்டு. பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். வேற்றுமதத்தினர், மொழியினரால் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். என்றாலும் மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும்.

உறவினர்களின் வருகையுண்டு. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. அண்டை வீட்டாரின் ஆதரவு பெருகும். அரசியல்வாதிகளே! கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி பூசலில் தலையிடாமலிருப்பது நல்லது.

கன்னிப்பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். கடையை மாற்றம் செய்வீர்கள். வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் உங்கள் திறமையை சோதித்துப் பார்த்த மேலதிகாரி இனி பாராட்டுவார்.

கலைத்துறையினரே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். எதிர்ப்புகளை கடந்து ஏற்றம் பெறும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 4, 8, 15, 17, 26
அதிஷ்ட எண்கள்: 6, 8
அதிஷ்ட நிறங்கள்: வெளிர் நீலம், கிரே
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி

Share this Story:

Follow Webdunia tamil