1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் எதிலும் மகிழ்ச்சியுண்டு. புது வேலை கிடைக்கும்.
வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். அப்பாவுடனான பிணக்கு நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். ஆனால் மனைவிக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.
மாதத்தின் மையப்பகுதியிலிருந்து உங்களின் மனமும், சிந்தனையும் மேலோங்கும். பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினரால் ஆதாயம் உண்டு. கல்யாணம் ஏற்பாடாகும். வி.ஐ.பிகள் சிலரின் ஆலோசனையால் சொத்துப் பிரச்சனைகள் சுமுகமாக முடியும். பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். புதிய சலுகைகளால் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவீர்கள்.
உத்யோகத்தில் வேலைச்சுமை கொஞ்சம் அதிகரித்தாலும் முகம் சுளிக்காமல் பாருங்கள். கலைத்துறையினரே! உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை துளிர்விடும் மாதமிது.
அதிஷ்ட தேதிகள்: 1, 9, 12, 10, 21
அதிஷ்ட எண்கள்: 3, 7
அதிஷ்ட நிறங்கள்: பிங்க், சில்வர் கிரே
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்